திருக்குறள் 128: ஒன்றானுந் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின் — நன்றாகா தாகி விடும்.

Thirukkural Verse 128

திருக்குறள் 128 — அடக்கம் உடைமை (The Possession of Self-restraint), அறத்துப்பால்.

ஒன்றானுந் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்

நன்றாகா தாகி விடும்.

Kissend private chat AD
Kissend

Private chats.
No phone number.

Connect by username. Keep your number private and your conversations personal.

Start private chat ↗ Free to start

கலைஞர் உரை

ஒரு குடம் பாலில் துளி நஞ்சுபோல், பேசும் சொற்களில் ஒரு சொல் தீய சொல்லாக இருந்து துன்பம் விளைவிக்குமானாலும், அந்தப் பேச்சில் உள்ள நல்ல சொற்கள் அனைத்தும் தீயவாகிவிடும்

மு. வரதராசன் உரை

தீய ‌சொற்களின் பொருளால் விளையும் தீமை ஒன்றாயினும் ஒருவனிடம் உண்டானால், அதனால் மற்ற அறங்களாலும் நன்மை விளையாமல் போகும்.

சாலமன் பாப்பையா உரை

தீய சொற்களின் பொருளால் பிறர்க்கு வரும் துன்பம் சிறிதே என்றாலும் அந்தக் குறை ஒருவனிடம் இருந்தால் அவனுக்குப் பிற அறங்களால் வரும் நன்மையம் தீமையாகப் போய்விடும்.

பரிமேலழகர் உரை

பரிமேலழகர் உரை: தீச்சொல் பொருள் பயன் ஒன்றானும் உண்டாயின்- தீயவாகிய சொற்களின் பொருள்களால் பிறர்க்கு வரும் துன்பம் ஒன்றாயினும் ஒருவன் பக்கல் உண்டாவதாயின்; நன்று ஆகாது ஆகிவிடும் - அவனுக்குப் பிற அறங்களான் உண்டான நன்மை தீதாய்விடும். (தீயசொல்லாவன - தீங்கு பயக்கும் பொய், குறளை, கடுஞ்சொல் என்பன. ஒருவன் நல்லவாகச் சொல்லும் சொற்களின் கண்ணே ஒன்றாயினும் 'தீச்சொற்படும் பொருளினது பயன் பிறர்க்கு உண்டாவதாயின்' என்று உரைப்பாரும் உளர்.).

மணக்குடவர் உரை

மணக்குடவர் உரை: ஒரு சொல்லேயாயினும் கேட்டார்க்கு இனிதாயிருந்து தீயசொல்லின் பொருளைப் பயக்குமாயின், நன்மையாகாதாகியே விடும். இது சால மொழிகூறினாலுந் தீதாமென்றது.

வீ. முனிசாமி உரை

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: தீய சொற்களினுடைய தன்மைகளில் பிறருக்கு வருகின்ற துன்பம் ஒன்றேனும் ஒருவனிடத்தில் உண்டாகிவிட்டால் அவனுக்கு பிற நன்மைகளினால் உண்டான பயனும் தீயதாய் ஆகிவிடும்.

Ondraanun Theechchol Porutpayan Untaayin

Nandraakaa Thaaki Vitum

Kissend private chat AD
Kissend

Private chats.
No phone number.

Connect by username. Keep your number private and your conversations personal.

Start private chat ↗ Free to start

Couplet

Though some small gain of good it seem to bring,The evil word is parent still of evil thing

Translation

Even a single evil word Will turn all good results to bad

Explanation

If a man's speech be productive of a single evil, all the good by him will be turned into evil

🌟 Kural of the Day

Discover daily wisdom from the timeless Thirukkural. Each day, we highlight one profound couplet that offers insights into life, virtue, and values—guiding you with ancient truth in modern times.

காதலர் இல்வழி மாலை கொலைக்களத்து

ஏதிலர் போல வரும்.

Kaadhalar Ilvazhi Maalai Kolaikkalaththu

Edhilar Pola Varum

🧠 About Thiruvalluvar

Thiruvalluvar is one of the greatest Tamil poets and philosophers known for composing the Thirukkural —a classic Tamil text consisting of 1,330 couplets covering ethics ( aram ), governance ( porul ), and love ( inbam ).

Though little is known about his personal life, his work has transcended time, offering practical wisdom and moral values that remain deeply relevant. Thiruvalluvar's verses have been translated into many lngs, making him a universal figure of wisdom and virtue.