திருக்குறள் 216: பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம் — நயனுடை யான்கண் படின்.

Thirukkural Verse 216

திருக்குறள் 216 — ஒப்புரவறிதல் (Duty to Society), அறத்துப்பால்.

பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்

நயனுடை யான்கண் படின்.

Kissend private chat AD
Kissend

Private chats.
No phone number.

Connect by username. Keep your number private and your conversations personal.

Start private chat ↗ Free to start

கலைஞர் உரை

ஈர நெஞ்சம் கொண்டவனிடம் செல்வம் சேருமேயானால் அது, ஊரின் நடுவே செழித்து வளர்ந்த மரம், பழுத்துக் குலுங்குவது போல எல்லோர்க்கும் பயன்படுவதாகும்

மு. வரதராசன் உரை

ஒப்புராவாகிய நற்பண்பு உடையவனிடம் செல்வம் சேர்ந்தால் அஃது ஊரின் நடுவே உள்ள பயன் மிகுந்த மரம் பழங்கள் பழுத்தாற் போன்றது.

சாலமன் பாப்பையா உரை

பிறரால் விரும்பப்படுபவனிடம் சேரும் செல்வம், உண்ணத் தகும், கனிதரும் மரம் ஊருக்கு உள்ளே பழுத்திருப்பதைப் போல எல்லார்க்கும் பொதுவாகும்.

பரிமேலழகர் உரை

பரிமேலழகர் உரை: செல்வம் நயன் உடையான்கண் படின் - செல்வம் ஒப்புரவு செய்வான் கண்ணே படுமாயின், பயன் மரம் உள்ளூர்ப் பழுத்தற்று - அது பயன்படுமரம் ஊர் நடுவே பழுத்தாற்போலும். (உலக நீதி பலவற்றுள்ளும் ஒப்புரவு சிறந்தமையின் அதனையே 'நயன்' என்றார்.எல்லார்க்கும் எளிதில் பயன் கொடுக்கும் என்பதாம்.).

மணக்குடவர் உரை

மணக்குடவர் உரை: பயன்படுமரம் ஊர்நடுவே பழுத்தாற் போலும்: பிறரால் விரும்பப்படுவான்மாட்டுச் செல்வ முண்டாயின். இது வேண்டாதார்க்கும் பயன்படு மென்றது.

Payanmaram Ulloorp Pazhuththatraal Selvam

Nayanutai Yaankan Patin

Kissend private chat AD
Kissend

Private chats.
No phone number.

Connect by username. Keep your number private and your conversations personal.

Start private chat ↗ Free to start

Couplet

A tree that fruits in th' hamlet's central mart,Is wealth that falls to men of liberal heart

Translation

Who plenty gets and plenty gives Is like town-tree teeming with fruits

Explanation

The wealth of a man (possessed of the virtue) of benevolence is like the ripening of a fruitful tree in the midst of a town

🌟 Kural of the Day

Discover daily wisdom from the timeless Thirukkural. Each day, we highlight one profound couplet that offers insights into life, virtue, and values—guiding you with ancient truth in modern times.

ஒத்த தறவோன் உயிர்வாழ்வான் மற்றையான்

செத்தாருள் வைக்கப் படும்.

Oththa Tharavon Uyirvaazhvaan Matraiyaan

Seththaarul Vaikkap Patum

🧠 About Thiruvalluvar

Thiruvalluvar is one of the greatest Tamil poets and philosophers known for composing the Thirukkural —a classic Tamil text consisting of 1,330 couplets covering ethics ( aram ), governance ( porul ), and love ( inbam ).

Though little is known about his personal life, his work has transcended time, offering practical wisdom and moral values that remain deeply relevant. Thiruvalluvar's verses have been translated into many lngs, making him a universal figure of wisdom and virtue.