z

தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு. | குறள் எண் - 212

thaalaatrith-thandha-porulellaam-thakkaarkku-velaanmai-seydhar-poruttu-212

113

Thirukkural Tamil & English Definition

திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார் க்கப் போகும் குறள்.

தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு.

கலைஞர் உரை

"தகுதியுடையோர் நலனுக்கு உதவிடும் பொருட்டே ஒருவன் முயன்று திரட்டிய பொருள் பயன்பட வேண்டும்"

மு. வரதராசன் உரை

"ஒப்புரவாளன் தன்னால் இயன்ற முயற்சி செய்து சேர்த்த பொருள் எல்லாம் தக்கவர்க்கு உதவி செய்வதற்கே ஆகும்."

சாலமன் பாப்பையா உரை

"முயன்று சம்பாதித்த பொருள் எல்லாம், உழைக்க முடியாமல் பொருள் தேவைப்படுவோர்க்கு உதவுவதற்கே."

பாரி மேலகர் உரை

"பரிமேலழகர் உரை: தக்கார்க்கு - தகுதி உடையார்க்கு ஆயின், தாள் ஆற்றித் தந்த பொருள் எல்லாம் - முயல்தலைச் செய்து ஈட்டிய பொருள் முழுவதும், வேளாண்மை செய்தற் பொருட்டு - ஒப்புரவு செய்தற் பயத்தவாம். (பிறர்க்கு உதவாதார் போலத் தாமே உண்டற்பொருட்டும் வைத்து இழத்தற்பொருட்டும் அன்று என்பதாயிற்று.). "

மணி குடவர் உரை

"மணக்குடவர் உரை: ஒருவன் முயன்று ஈட்டிய பொருளெல்லாம் தகுதி யுடையார்க்கு உபகரித்தற்காகவாம். இது பொருளுண்டானால் ஒப்புரவு செய்கவென்றது. "

வி முனுசாமி உரை

"திருக்குறளார் வீ. முனிசாமி உரை: தகுதியுடைய பெரியவர்களுக்கு, முயற்சி செய்து ஈட்டிய பொருளெல்லாம் ஒப்புரவு (உதவி) செய்வதற்கேயாகும். "

Thaalaatrith Thandha Porulellaam Thakkaarkku
Velaanmai Seydhar Poruttu

Couplet

The worthy say, when wealth rewards their toil-spent hours,For uses of beneficence alone 'tis ours

Translation

All the wealth that toils give Is meant to serve those who deserve

Explanation

All the wealth acquired with perseverance by the worthy is for the exercise of benevolence

113

Write Your Comment