திருக்குறள் 135: அழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன்று இல்லை — ஒழுக்க மிலான்கண் உயர்வு.

Thirukkural Verse 135

திருக்குறள் 135 — ஒழுக்கம் உடைமை (The Possession of Decorum), அறத்துப்பால்.

அழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன்று இல்லை

ஒழுக்க மிலான்கண் உயர்வு.

Kissend private chat AD
Kissend

Private chats.
No phone number.

Connect by username. Keep your number private and your conversations personal.

Start private chat ↗ Free to start

கலைஞர் உரை

பொறாமையுடையவனுக்கும், நல்லொழுக்கமில்லாதவனுக்கும் அமையும் வாழ்வு, உயர்வான வாழ்வாகக் கருதப்பட மாட்டாது

மு. வரதராசன் உரை

பொறாமை உடையவனிடத்தில் ஆக்கம் இல்லாதவாறு போல, ஒழுக்கம் இல்லாதவனுடைய வாழ்க்கையில் உயர்வு இல்லையாகும்.

சாலமன் பாப்பையா உரை

பொறாமை உள்ளவனுக்குச் செல்வம் இல்லை என்பது போல், ஒழுக்கம் இல்லாதவனுக்கு உயர்குலம் என்பதும் இல்லை.

பரிமேலழகர் உரை

பரிமேலழகர் உரை: அழுக்காறு உடையான்கண் ஆக்கம் போன்று - அழுக்காறுடையான்மாட்டு ஆக்கமில்லாதாற்போல, ஒழுக்கம் இலான் கண் உயர்வு இல்லை - ஒழுக்கம் இல்லாதவன் மாட்டும் உயர்ச்சி இல்லை. (உவமையான் ஒழுக்கம் இல்லாதவன் சுற்றத்திற்கும் உயர்ச்சி இல்லை என்பது பெற்றாம்; என்னை? கொடுப்பது அழுக்கறுப்பான் 'சுற்ற'மும் (குறள்.166)நல்கூர்தலின். 'உயர்வு' - உயர் குலமாதல்.).

மணக்குடவர் உரை

மணக்குடவர் உரை: மனக்கோட்ட முடையவன்மாட்டு ஆக்கம் இல்லை யானாற் போல ஒழுக்கமில்லாதான் மாட்டு மிகுதியில்லையாம். இஃது உயர்ச்சியில்லையா மென்றது.

வீ. முனிசாமி உரை

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: பொறாமை உள்ளவனிடத்தில் செல்வப் பெருக்கம் இல்லாததுபோல், ஒழுக்கம் இல்லாதவனிடத்தில் உயர்ச்சி என்பது இல்லாததாகிவிடும்.

Azhukkaa Rutaiyaankan Aakkampondru Illai

Ozhukka Milaankan Uyarvu

Kissend private chat AD
Kissend

Private chats.
No phone number.

Connect by username. Keep your number private and your conversations personal.

Start private chat ↗ Free to start

Couplet

The envious soul in life no rich increase of blessing gains,So man of 'due decorum' void no dignity obtains

Translation

The envious prosper but ill The ill-behaved sinks lower still

Explanation

Just as the envious man will be without wealth, so will the man of destitute of propriety of conduct be without greatness

🌟 Kural of the Day

Discover daily wisdom from the timeless Thirukkural. Each day, we highlight one profound couplet that offers insights into life, virtue, and values—guiding you with ancient truth in modern times.

சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ

நன்றின்பால் உய்ப்ப தறிவு.

Sendra Itaththaal Selavitaa Theedhoreei

Nandrinpaal Uyppa Tharivu

🧠 About Thiruvalluvar

Thiruvalluvar is one of the greatest Tamil poets and philosophers known for composing the Thirukkural —a classic Tamil text consisting of 1,330 couplets covering ethics ( aram ), governance ( porul ), and love ( inbam ).

Though little is known about his personal life, his work has transcended time, offering practical wisdom and moral values that remain deeply relevant. Thiruvalluvar's verses have been translated into many lngs, making him a universal figure of wisdom and virtue.