z

தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார். | குறள் எண் - 104

thinaiththunai-nandri-seyinum-panaiththunaiyaak-kolvar-payandheri-vaar-104

185

Thirukkural Tamil & English Definition

திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார் க்கப் போகும் குறள்.

தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார்.

கலைஞர் உரை

"ஒருவர் செய்யும் தினையளவு நன்மையைக்கூட அதனால் பயன்பெறும் நன்றியுள்ளவர் பல்வேறு வகையில் பயன்படக்கூடிய பனையின் அளவாகக் கருதுவார்"

மு. வரதராசன் உரை

"ஒருவன் தினையளவாகிய உதவியைச் செய்த போதிலும் அதன் பயனை ஆராய்கின்றவர், அதனையே பனையளவாகக் கொண்டு போற்றுவர்."

சாலமன் பாப்பையா உரை

"தினை அளவாக மிகச் சிறிய உதவியே செய்யப்பெற்றிருந்தாலும் உதவியின் பயனை நன்கு அறிந்தவர் அதைப் பனை அளவு மிகப் பெரிய உதவியாய்க் கருதுவர்"

பாரி மேலகர் உரை

"பரிமேலழகர் உரை: தினைத்துணை நன்றி செயினும் - தமக்குத் தினையளவிற்றாய உபகாரத்தை ஒருவன் செய்தானாயினும்; பனைத்துணையாக் கொள்வர் பயன் தெரிவார் - அதனை அவ்வளவிற்றாகக் கருதாது, பனையளவிற்றாகக் கருதுவர் அக்கருத்தின் பயன் தெரிவார். ('தினை', 'பனை' என்பன சிறுமை பெருமைகட்குக் காட்டுவன சில அளவை. அக்கருத்தின் பயனாவது அங்ஙனம் கருதுவார்க்கு வரும் பயன்.). "

மணி குடவர் உரை

"மணக்குடவர் உரை: தினையளவு நன்றி செய்தாராயினும், அதனை யவ்வளவிற்றென்று நினையாது, பனையளவாகக் கொள்வார் அதன் பயனை யறிபவர். பனையளவு- அதனுயர்ச்சி. "

வி முனுசாமி உரை

"திருக்குறளார் வீ. முனிசாமி உரை: தினையளவினதாகிய நன்மையினைச் செய்தாலும் அதனைப் பனையளவினதாகக் கொள்ளுவார்கள். யாரென்றால், அக்கருத்தின் பயனையறிந்தவர்கள் என்பதாம். "

Thinaiththunai Nandri Seyinum Panaiththunaiyaak
Kolvar Payandheri Vaar

Couplet

Each benefit to those of actions' fruit who rightly deem,Though small as millet-seed, as palm-tree vast will seem

Translation

Help given though millet-small Knowers count its good palm-tree tall

Explanation

Though the benefit conferred be as small as a millet seed, those who know its advantage will consider it as large as a palmyra fruit

185

Write Your Comment