z

வேண்டற்க வெஃகியாம் ஆக்கம் விளைவயின்
மாண்டற் கரிதாம் பயன். | குறள் எண் - 177

ventarka-veqkiyaam-aakkam-vilaivayin-maantar-karidhaam-payan-177

138

Thirukkural Tamil & English Definition

திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார் க்கப் போகும் குறள்.

வேண்டற்க வெஃகியாம் ஆக்கம் விளைவயின்
மாண்டற் கரிதாம் பயன்.

கலைஞர் உரை

"பிறர் பொருளைக் கவர்ந்து ஒருவன் வளம்பெற விரும்பினால் அந்த வளத்தின் பயன், நலம் தருவதாக இருக்காது"

மு. வரதராசன் உரை

"பிறர் பொருளைக் கவர விரும்புவதால் ஆகும் ஆக்கத்தை விரும்பாதிருக்க வேண்டும்; அது பயன் விளைவிக்கும்போது அப்பயன் நன்மையாவது அரிதாகும்."

சாலமன் பாப்பையா உரை

"பிறர் பொருளை அவர் விரும்பாதிருக்க, நாம் விரும்பிப் பெற்று அனுபவிக்கும்போது அதன் பயன் நல்லதாக இல்லை என்று அறிவதால், பிறர் பொருளைக் கவர்வதற்கு விரும்ப வேண்டா."

பாரி மேலகர் உரை

"பரிமேலழகர் உரை: வெஃகி ஆம் ஆக்கம் வேண்டற்க - பிறர் பொருளை அவாவிக்கொண்டு அதனால் ஆகின்ற ஆக்கத்தை விரும்பாது ஒழிக; விளைவயின் பயன் மாண்டதற்கு அரிது ஆம் - பின் அனுபவிக்குங்கால் அவ்வாக்கத்தின் பயன் நன்றாதல் இல்லை ஆகலான். ('விளை' என்பது முதல்நிலைத் தொழிற்பெயர். இவை ஏழு பாட்டானும் வெஃகுதலின் குற்றம் கூறப்பட்டது). "

மணி குடவர் உரை

"மணக்குடவர் உரை: பிறர்பொருளை விரும்பிப் பெறுகின்ற ஆக்கத்தை வேண்டாதொழிக; அது பயன்படுங் காலத்தில் ஆகும் பயன் நன்றாதலில்லையாதலான். "

வி முனுசாமி உரை

"திருக்குறளார் வீ. முனிசாமி உரை: பிறர் பொருளைக் கவர்வதால் வரும் ஆக்கத்தினை விரும்பாதிருப்பார்களாக; அப்படிக் கவர்ந்ததால் அனுபவிக்கும்போது அதன் பயன் நன்மையுடையதாக இருக்காது. "

Ventarka Veqkiyaam Aakkam Vilaivayin
Maantar Karidhaam Payan

Couplet

Seek not increase by greed of gain acquired;That fruit matured yields never good desired

Translation

Shun the fruit of covetousness All its yield is inglorious

Explanation

Desire not the gain of covetousness In the enjoyment of its fruits there is no glory

138

Write Your Comment