அறிகிலார் எல்லாரும் என்றேஎன் காமம் மறுகின் மறுகும் மருண்டு. | குறள் எண் - 1139

Thirukkural Tamil & English Definition
திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார் க்கப் போகும் குறள்.
அறிகிலார் எல்லாரும் என்றேஎன் காமம் மறுகின் மறுகும் மருண்டு.
கலைஞர் உரை
"என்னைத் தவிர யாரும் அறியவில்லை என்பதற்காக என் காதல் தெருவில் பரவி மயங்கித் திரிகின்றது போலும்!"
மு. வரதராசன் உரை
"அமைதியாய் இருந்ததால் எல்லோரும் அறியவில்லை என்று கருதி என்னுடைய காமம் தெருவில் பரவி மயங்கிச் சுழல்கின்றது."
சாலமன் பாப்பையா உரை
"என் காதல் எனது மன அடக்கத்தால் எல்லாருக்கம் தெரியவில்லை என்று எண்ணி அதைத் தெரிவிக்க தெருவெங்கும் தானே அம்பலும் அலருமாய்ச் சுற்றிச் சுற்றி வருகிறது."
பாரி மேலகர் உரை
"பரிமேலழகர் உரை: (இதுவும் அது.) எல்லாரும் அறிகிலார் என்று - யான் முன் அடங்கி நிற்றலான் எல்லாரும் என்னை அறிதல் இலர், இனி அவ்வாறு நில்லாது யானே வெளிப்பட்டு அறிவிப்பல் என்று கருதி; என் காமம் மறுகில் மருண்டு மறுகும் - என் காமம் இவ்வூர் மறுகின்கண்ணே மயங்கிச் சுழலாநின்றது. (மயங்குதல் - அம்பலாதல், மறுகுதல் - அலராதல், 'அம்பலும் அலருமாயிற்று'. இனி 'அறத்தொடு நிற்றல் வேண்டும்', என்பதாம் 'அறிவிலார்' என்பதூஉம் பாடம்.). "
மணி குடவர் உரை
"மணக்குடவர் உரை: என்னை யொழிந்த எல்லாரும் அறிவிலரென்றே சொல்லி என் காமமானது தலை மயங்கி மறுகின் கண்ணே வெளிப்படச் சுழலா நின்றது. சுழல்தல் - இவ்வாறு சொல்லித் திரிதல். "
வி முனுசாமி உரை
"திருக்குறளார் வீ. முனிசாமி உரை: 'யான் முன்பு அடங்கி இருந்ததால் எல்லாரும் என்னை அறியவில்லை". இனி அவ்வாறின்றி யானே வெளிப்பட்டு அறிவிப்பேன் என்று கருதி என் காமம் இவ்வூர் வீதியின் கண்ணே மயங்கிச் சுழல்கின்றது. "
Arikilaar Ellaarum Endreen Kaamam Marukin Marukum Maruntu
Couplet
'There's no one knows my heart,' so says my love,And thus, in public ways, perturbed will rove
Translation
My perplexed love roves public street Believing that none knows its secret
Explanation
And thus, in public ways, perturbed will rove
Write Your Comment