திருக்குறள் 706: அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம் — கடுத்தது காட்டும் முகம்.

Thirukkural Verse 706

திருக்குறள் 706 — குறிப்பறிதல் (The Knowledge of Indications), பொருட்பால்.

அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்

கடுத்தது காட்டும் முகம்.

கலைஞர் உரை

கண்ணாடி, தனக்கு உள்ளத்தைக் காட்டுவதுபோல ஒருவரது மனத்தில் உள்ளத்தில் அவரது முகம் காட்டி விடும்

மு. வரதராசன் உரை

தன்னை அடுத்தப் பொருளைத் தன்னிடம் காட்டும் பளிங்கு போல், ஒருவனுடைய நெஞ்சில் மிகுந்துள்ளதை அவனுடைய முகம் காட்டும்.

சாலமன் பாப்பையா உரை

தன் அருகே இருக்கும் பொருளின் நிறத்தைக் காட்டும் பளிங்கினைப்போல் ஒருவனது மனத்தே நிகழ்வதை அவன் முகம் காட்டும்.

பரிமேலழகர் உரை

பரிமேலழகர் உரை: அடுத்தது காட்டும் பளிங்கு போல் - தன்னை அடுத்த பொருளது நிறத்தைத் தானே கொண்டு காட்டும் பளிங்கு போல்; நெஞ்சம் கடுத்தது முகம் காட்டும் - ஒருவன் நெஞ்சத்து மிக்கதனை அவன் முகம் தானே கொண்டு காட்டும். ('அடுத்தது' என்பது ஆகுபெயர். கடுத்தது என்பது 'கடி' என்னும் உரிச்சொல் அடியாய் வந்த தொழிற் பெயர். உவமை ஒரு பொருள் பிறிதொரு பொருளின் பண்பைக் கொண்டு தோற்றுதலாகிய தொழில் பற்றி வந்தது.).

மணக்குடவர் உரை

மணக்குடவர் உரை: தன்னையடுத்த வண்ணத்தைக் காட்டுகின்ற பளிங்கைப்போல நெஞ்சத்து மிக்கதனை முகம் காட்டும். இது முகம் நெஞ்சத்து வெகுட்சி யுண்டாயின் கருகியும் மகிழ்ச்சியுண்டாயின் மலர்ந்தும் காட்டுமென்றது.

Atuththadhu Kaattum Palingupol Nenjam

Katuththadhu Kaattum Mukam

Couplet

As forms around in crystal mirrored clear we find,The face will show what's throbbing in the mind

Translation

What throbs in mind the face reflects Just as mirror nearby objects

Explanation

As the mirror reflects what is near so does the face show what is uppermost in the mind

Comments (1)

Tara Gole
Tara Gole
tara gole verified

1 year ago

Absolutely love this one. It reminds me of the core values my grandparents taught me.

🌟 Kural of the Day

Discover daily wisdom from the timeless Thirukkural. Each day, we highlight one profound couplet that offers insights into life, virtue, and values—guiding you with ancient truth in modern times.

பழகிய நட்பெவன் செய்யுங் கெழுதகைமை

செய்தாங்கு அமையாக் கடை.

Pazhakiya Natpevan Seyyung Kezhudhakaimai

Seydhaangu Amaiyaak Katai

🧠 About Thiruvalluvar

Thiruvalluvar is one of the greatest Tamil poets and philosophers known for composing the Thirukkural —a classic Tamil text consisting of 1,330 couplets covering ethics ( aram ), governance ( porul ), and love ( inbam ).

Though little is known about his personal life, his work has transcended time, offering practical wisdom and moral values that remain deeply relevant. Thiruvalluvar's verses have been translated into many lngs, making him a universal figure of wisdom and virtue.