திருக்குறள் 668: கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது — தூக்கங் கடிந்து செயல்.

Thirukkural Verse 668

திருக்குறள் 668 — வினைத்திட்பம் (Power in Action), பொருட்பால்.

கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது

தூக்கங் கடிந்து செயல்.

கலைஞர் உரை

மனக் குழப்பமின்றித் தெளிவாக முடிவு செய்யப்பட்ட ஒரு செயலைத் தளர்ச்சியும், தாமதமும் இடையே ஏற்படாமல் விரைந்து நிறைவேற்ற வேண்டும்

மு. வரதராசன் உரை

மனம் தளராமல் ஆராய்ந்து துணிந்து ஏற்றத் தொழிலைச் சோர்வு கொள்ளாமல் காலந் தாழ்த்தாமல் செய்து முடிக்க வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை

மனம் தெளிந்து செய்யத் துணிந்த செயலைத் தடுமாறாமல் தாமதிக்காமல் செய்க.

பரிமேலழகர் உரை

பரிமேலழகர் உரை: கலங்காது கண்ட வினைக்கண் - மனந்தௌ¤ந்து செய்வதாகத் துணிந்த வினையின்கண்; துளங்காது தூக்கம் கடிந்து செயல் - பின் அசைதலின்றி நீட்டித்தலை யொழிந்து செய்க. (கலங்கிய வழி ஒழிவதும் செய்வது போலத் தோன்றுமாதலின்,தௌ¤ந்து பலகால் ஆராய்ந்து தாம் செய்வதாக ஓர்த்த வினையைக் 'கலங்காது கண்டவினை' என்றார். துளங்காமை - திட்பம் உடைமை.).

மணக்குடவர் உரை

மணக்குடவர் உரை: கலக்கமின்றி ஆராய்ந்துகண்ட வினையிடத்துப் பின்னைத் துளக்கமின்றி அதனை நீட்டியாது செய்க. இது விரைந்து செய்யவேண்டு மென்றது.

Kalangaadhu Kanta Vinaikkan Thulangaadhu

Thookkang Katindhu Seyal

Couplet

What clearly eye discerns as right, with steadfast will,And mind unslumbering, that should man fulfil

Translation

Waver not; do wakefully The deed resolved purposefully

Explanation

An act that has been firmly resolved on must be as firmly carried out without delay

Comments (1)

Tiya Ghose
Tiya Ghose
tiya ghose verified

1 year ago

So much truth in this couplet. The poet captured an eternal value in just two lines.

🌟 Kural of the Day

Discover daily wisdom from the timeless Thirukkural. Each day, we highlight one profound couplet that offers insights into life, virtue, and values—guiding you with ancient truth in modern times.

சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை

இகல்வெல்லல் யார்க்கும் அரிது.

Solalvallan Sorvilan Anjaan Avanai

Ikalvellal Yaarkkum Aridhu

🧠 About Thiruvalluvar

Thiruvalluvar is one of the greatest Tamil poets and philosophers known for composing the Thirukkural —a classic Tamil text consisting of 1,330 couplets covering ethics ( aram ), governance ( porul ), and love ( inbam ).

Though little is known about his personal life, his work has transcended time, offering practical wisdom and moral values that remain deeply relevant. Thiruvalluvar's verses have been translated into many lngs, making him a universal figure of wisdom and virtue.