திருக்குறள் 498: சிறுபடையான் செல்லிடம் சேரின் உறுபடையான் — ஊக்கம் அழிந்து விடும்.

Thirukkural Verse 498

திருக்குறள் 498 — இடனறிதல் (Knowing the Place), பொருட்பால்.

சிறுபடையான் செல்லிடம் சேரின் உறுபடையான்

ஊக்கம் அழிந்து விடும்.

கலைஞர் உரை

சிறிய படை என்றாலும் அது தனக்குரிய இடத்தில் இருந்து போரிட்டால் பெரிய படையை வென்று விட முடியும்

மு. வரதராசன் உரை

சிறிய படை உடையவனுக்குத் தக்கதாக உள்ள இடத்தில் பொருந்தி நின்றால், பெரிய படை உடையவன் தன் ஊக்கம் அழிவான்.

சாலமன் பாப்பையா உரை

பெரிய படையை உடையவன், சிறிய படையை உடையவன் ஓடி இருக்கும் இடந்தேடிப் போனால், போனவனின் பெருமை அழியும்.

பரிமேலழகர் உரை

பரிமேலழகர் உரை: உறுபடையான் - பெரும்படையுடைய அரசன், சிறுபடையான் செல் இடம் சேரின் - ஏனைச் சிறுபடையானை அழித்தல் கருதி அவன் புகலைச் சென்று சாருமாயின், ஊக்கம் அழிந்து விடும் - அவனால் தன் பெருமை அழியும். ('செல் இடம்' அவனுக்குச் செல்லும் இடம். 'அழிந்துவிடும்' என்பது 'எழுந்திருக்கும் என்றாற்போல் ஒரு சொல் ஊக்கத்தின் அழிவு உடையான்மேல் ஏற்றப்பட்டது. தன் படைப்பெருமை நோக்கி , இடன் நோக்காது செல்வன் ஆயின், அஃது அப்படைக்கு ஒருங்குசென்று வினைசெயல் ஆகாமையானாகப் பயிற்சியின்மையானாக,அப்பெருமையால் பயன் இன்றித் தான் அழிந்துவிடும் என்பதாம்.).

மணக்குடவர் உரை

மணக்குடவர் உரை: சிறுபடையை யுடையவனுக்கு இயலுமிடத்தே பெரும்படையை யுடையவன் பொருந்துவனாயின் மன மிகுதி கெடும். இஃது இகழ்ந்து செல்லின், வெற்றியில்லையாமென்றது.

Sirupataiyaan Sellitam Serin Urupataiyaan

Ookkam Azhindhu Vitum

Couplet

If lord of army vast the safe retreat assailOf him whose host is small, his mightiest efforts fail

Translation

Though force is small, if place is right One quells a foe of well-armed might

Explanation

The power of one who has a large army will perish, if he goes into ground where only a small army can act

Comments (2)

Nirvi Bobal
Nirvi Bobal
nirvi bobal verified

1 year ago

Absolutely love this one. It reminds me of the core values my grandparents taught me.

Mamooty Choudhary
Mamooty Choudhary
mamooty choudhary verified

1 year ago

This verse speaks volumes. We need more reminders like this in today’s fast-paced world.

🌟 Kural of the Day

Discover daily wisdom from the timeless Thirukkural. Each day, we highlight one profound couplet that offers insights into life, virtue, and values—guiding you with ancient truth in modern times.

உடையர் எனப்படுவது ஊக்கம் அஃதில்லார்

உடையது உடையரோ மற்று.

Utaiyar Enappatuvadhu Ookkam Aqdhillaar

Utaiyadhu Utaiyaro Matru

🧠 About Thiruvalluvar

Thiruvalluvar is one of the greatest Tamil poets and philosophers known for composing the Thirukkural —a classic Tamil text consisting of 1,330 couplets covering ethics ( aram ), governance ( porul ), and love ( inbam ).

Though little is known about his personal life, his work has transcended time, offering practical wisdom and moral values that remain deeply relevant. Thiruvalluvar's verses have been translated into many lngs, making him a universal figure of wisdom and virtue.