திருக்குறள் 436: தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பின் — என்குற்ற மாகும் இறைக்கு?

Thirukkural Verse 436

திருக்குறள் 436 — குற்றங்கடிதல் (The Correction of Faults), பொருட்பால்.

தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பின்

என்குற்ற மாகும் இறைக்கு?

கலைஞர் உரை

முதலில் தனக்குள்ள குறையை நீக்கிக் கொண்டு அதன் பின்னர் பிறர் குறையைக் கண்டு சொல்லும் தலைவனுக்கு என்ன குறை நேரும்?

மு. வரதராசன் உரை

முன்னே தன் குற்றத்தைக் கண்டு நீக்கி பிறகு பிறருடையக் குற்றத்தை ஆராயவல்லவனானால், தலைவனுக்கு என்ன குற்றமாகும்.

சாலமன் பாப்பையா உரை

முதலில் தன் குற்றத்தைக் கண்டு விலக்கிப் பிறகு அடுத்தவர் குற்றத்தைக் காணும் ஆற்றல் மிக்க அரசிற்குக் குற்றம் ஏதும் வராது!

பரிமேலழகர் உரை

பரிமேலழகர் உரை: தன் குற்றம் நீக்கிப் பிறர் குற்றம் காண்கிற்பின் - முன்னர்த்தன் குற்றத்தைக் கண்டு கடிந்து, பின்னர்ப் பிறர் குற்றங்காண வல்லனாயின், இறைக்கு ஆகும் குற்றம் என் - அரசனுக்கு ஆகக்கடவ குற்றம் யாது? (அரசனுக்குத் தன் குற்றம் கடியா வழியே பிறர் குற்றம் கடிதல் குற்றமாம், அது கடிந்தவழி முறை செய்தலாம் என்பார், என்குற்றம் ஆகும் என்றார். எனவே தன் குற்றம் கடிந்தவனே முறைசெய்தற்கு உரியவன் என்பதாயிற்று. இவை நான்கு பாட்டானும்அவற்றது கடிதற்பாடு பொதுவகையால் கூறப்பட்டது. இனிச்சிறப்பு வகையால் கூறுப.).

மணக்குடவர் உரை

மணக்குடவர் உரை: தனக்குள்ள குற்றத்தை நீக்கிப் பிறர்மாட்டுள்ள குற்றத்தை ஆராயவல்லனாயின் அரசனுக்கு என்ன குற்ற முளதாம். இது தன்மாட்டுள்ள குற்றத்தை நீக்குதலே யன்றிப் பிறர் மாட்டுள்ள குற்றத்தையும் கடிய வேண்டுமென்றது.

வீ. முனிசாமி உரை

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: தன்னுடைய குற்றத்தினை முன்னதாகவே கண்டுகொண்டு அதனை நீக்கிப் பின்னர், பிறர் குற்றத்தினைக் காணவல்லவராக இருந்தால் தலைவனுக்கு நேரக்கூடிய குற்றம் யாது?.

Thankutram Neekkip Pirarkutrang Kaankirpin

Enkutra Maakum Iraikku?

Couplet

Faultless the king who first his own faults cures, and thenPermits himself to scan faults of other men

Translation

What fault can be the king's who cures First his faults, then scans others

Explanation

What fault will remain in the king who has put away his own evils, and looks after the evils of others

🌟 Kural of the Day

Discover daily wisdom from the timeless Thirukkural. Each day, we highlight one profound couplet that offers insights into life, virtue, and values—guiding you with ancient truth in modern times.

நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்ணென்னும்

தீயாண்டுப் பெற்றாள் இவள்?

Neengin Theruum Kurukungaal Thannennum

Theeyaantup Petraal Ival?

🧠 About Thiruvalluvar

Thiruvalluvar is one of the greatest Tamil poets and philosophers known for composing the Thirukkural —a classic Tamil text consisting of 1,330 couplets covering ethics ( aram ), governance ( porul ), and love ( inbam ).

Though little is known about his personal life, his work has transcended time, offering practical wisdom and moral values that remain deeply relevant. Thiruvalluvar's verses have been translated into many lngs, making him a universal figure of wisdom and virtue.