திருக்குறள் 458: மனநலம் நன்குடைய ராயினும் சான்றோர்க்கு — இனநலம் ஏமாப் புடைத்து.
திருக்குறள் 458 — சிற்றினம் சேராமை (Avoiding mean Associations), பொருட்பால்.
மனநலம் நன்குடைய ராயினும் சான்றோர்க்கு
இனநலம் ஏமாப் புடைத்து.
கலைஞர் உரை
மனவளம் மிக்க சான்றோராக இருப்பினும் அவர் சேர்ந்துள்ள கூட்டத்தினரைப் பொருத்தே வலிமை வந்து வாய்க்கும்
மு. வரதராசன் உரை
மனதின் நன்மையை உறுதியாக உடையவராயினும் சான்றோர்க்கு இனத்தின் நன்மை மேலும் நல்ல காவலாக அமையும்.
சாலமன் பாப்பையா உரை
மனநலத்தைச் சிறப்பாகப் பெற்றவரே ஆயினும், நல்ல குணம் உடையவர்க்கு இனநலம் பாதுகாப்பாக இருக்கும்.
பரிமேலழகர் உரை
பரிமேலழகர் உரை: மனநலம் நன்கு உடையராயினும் மனநன்மையை முன்னை நல்வினையால் தாமே உடையராயினும் சான்றோர்க்குஇனநலம் ஏமாப்பு உடைத்து அமைந்தார்க்கு இனநன்மை அதற்குவலியாதலையுடைத்து ('நன்கால்' என்னும் மூன்றன் உருபுவிகாரத்தால் தொக்கது. அந் நல்வினை உள்வழியும்மனநலத்தை வளர்த்து வருதலின் அதற்கு ஏமாப்பு உடைத்தாயிற்று.
மணக்குடவர் உரை
மணக்குடவர் உரை: மன நன்மை மிக வுடையராயினும் இன நன்மை யுடைமை சான்றோர்க்குக் காவலாதலையுடைத்து. இஃது இனநலம் அல்லாராயின் பிறரா லிகழப்படுவராதலான் இனநலம் இகழ்ச்சி வாராமற் காக்குமென்றது.
வீ. முனிசாமி உரை
திருக்குறளார் வீ. முனிசாமி உரை: மனம் நன்றாக இருப்பதனை நல்லபடியாகத் தாமே தம் பிறவியிலேயே உடையவராக இருந்தாலும், நிறைகுணம் பெற்ற பெரியோர்களுக்கு சேர்ந்த இனம் நன்றாக இருப்பது, காப்பான வலிமை உடையதாகும்.
Mananalam Nankutaiya Raayinum Saandrorkku
Inanalam Emaap Putaiththu
Couplet
To perfect men, though minds right good belong,Yet good companionship is confirmation strong
Translation
Men of wisdom, though good in mind In friends of worth a new strength find
Explanation
Yet good companionship is confirmation strong
🌟 Kural of the Day
Discover daily wisdom from the timeless Thirukkural. Each day, we highlight one profound couplet that offers insights into life, virtue, and values—guiding you with ancient truth in modern times.
முனைமுகத்து மாற்றலர் சாய வினைமுகத்து
வீறெய்தி மாண்ட தரண்.
Munaimukaththu Maatralar Saaya Vinaimukaththu
Veereydhi Maanta Tharan
🧠 About Thiruvalluvar
Thiruvalluvar is one of the greatest Tamil poets and philosophers known for composing the Thirukkural —a classic Tamil text consisting of 1,330 couplets covering ethics ( aram ), governance ( porul ), and love ( inbam ).
Though little is known about his personal life, his work has transcended time, offering practical wisdom and moral values that remain deeply relevant. Thiruvalluvar's verses have been translated into many lngs, making him a universal figure of wisdom and virtue.
Tara Gole
1 year ago
Really appreciate the wisdom here. Makes me want to follow this guidance in daily life.