திருக்குறள் 1015: பிறர்பழியும் தம்பழியும் நாணுவார் நாணுக்கு — உறைபதி என்னும் உலகு.

Thirukkural Verse 1015

திருக்குறள் 1015 — நாணுடைமை (Shame), பொருட்பால்.

பிறர்பழியும் தம்பழியும் நாணுவார் நாணுக்கு

உறைபதி என்னும் உலகு.

Kissend private chat AD
Kissend

Private chats.
No phone number.

Connect by username. Keep your number private and your conversations personal.

Start private chat ↗ Free to start

கலைஞர் உரை

தமக்கு வரும் பழிக்காக மட்டுமின்றிப் பிறர்க்கு வரும் பழிக்காகவும் வருந்தி நாணுகின்றவர், நாணம் எனும் பண்பிற்கான உறைவிடமாவார்

மு. வரதராசன் உரை

பிறர்க்கு வரும் பழிக்காகவும், தமக்கு வரும் பழிக்காகவும் நாணுகின்றவர் நாணத்திற்கு உறைவிட மானவர் என்று உலகம் சொல்லும்.

சாலமன் பாப்பையா உரை

தமக்கு வரும் பழிக்கு மட்டும் அன்றி, பிறர்க்கு வரும் பழிக்கும் வெட்கப்படுவோர், நாணம் வாழும் இடம் என்று உலகத்தவர் கூறுவர்.

பரிமேலழகர் உரை

பரிமேலழகர் உரை: பிறர் பழியும் தம் பழியும் நாணுவார் - பிறர்க்கு வரும் பழியையும் தமக்கு வரும் பழியையும் ஒப்ப மதித்து நாணுவாரை; உலகு நாணுக்கு உறைபதி என்னும் - உலகத்தார் நாணுக்கு உறைவிடம் என்று சொல்லுவர். (ஒப்ப மதித்தல் - அதுவும் தமக்கு வந்ததாகவே கருதுதல். அக்கருத்துடையர் பெரியராகலின் அவரை உயர்ந்தோர் யாவரும் புகழ்வர் என்பதாம். இதனான் அதனை உடையாரது சிறப்புக் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை

மணக்குடவர் உரை: பிறர்க்கு வரும் பழியையும் தமக்கு வரும் பழியைப்போல அஞ்சி நாணுமவர்களை நாணுக்கு இருப்பிடமென்று சொல்லுவர் உலகத்தார். இது தம்பழிக்கு அஞ்சி நாணுதலேயன்றிப் பிறர்பழிக்கும் அஞ்சி நாண வேண்டுமென்றது.

Pirarpazhiyum Thampazhiyum Naanuvaar Naanukku

Uraipadhi Ennum Ulaku

Kissend private chat AD
Kissend

Private chats.
No phone number.

Connect by username. Keep your number private and your conversations personal.

Start private chat ↗ Free to start

Couplet

As home of virtuous shame by all the world the men are known,Who feel ashamed for others, guilt as for their own

Translation

In them resides the sense of shame Who blush for their and other's blame

Explanation

The world regards as the abode of modesty him who fear his own and other's guilt

🌟 Kural of the Day

Discover daily wisdom from the timeless Thirukkural. Each day, we highlight one profound couplet that offers insights into life, virtue, and values—guiding you with ancient truth in modern times.

செயற்பால தோரும் அறனே ஒருவற்கு

உயற்பால தோரும் பழி.

Seyarpaala Thorum Arane Oruvarku

Uyarpaala Thorum Pazhi

🧠 About Thiruvalluvar

Thiruvalluvar is one of the greatest Tamil poets and philosophers known for composing the Thirukkural —a classic Tamil text consisting of 1,330 couplets covering ethics ( aram ), governance ( porul ), and love ( inbam ).

Though little is known about his personal life, his work has transcended time, offering practical wisdom and moral values that remain deeply relevant. Thiruvalluvar's verses have been translated into many lngs, making him a universal figure of wisdom and virtue.