z

இன்றும் வருவது கொல்லோ நெருநலும்
கொன்றது போலும் நிரப்பு. | குறள் எண் - 1048

indrum-varuvadhu-kollo-nerunalum-kondradhu-polum-nirappu-1048

114

Thirukkural Tamil & English Definition

திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார் க்கப் போகும் குறள்.

இன்றும் வருவது கொல்லோ நெருநலும்
கொன்றது போலும் நிரப்பு.

கலைஞர் உரை

"கொலை செய்வதுபோல நேற்றுக் கொடுமைப்படுத்திய வறுமை, தொடர்ந்து இன்றைக்கும் வராமல் இருக்க வேண்டுமே என்று வறியவன் ஏங்குவான்"

மு. வரதராசன் உரை

"நேற்றும் கொலை செய்தது போல் துன்புறுத்திய வறுமை இன்றும் என்னிடம் வருமோ, (என்று வறியவன் நாள்தோறும் கலங்கி வருந்துவான்)."

சாலமன் பாப்பையா உரை

"நேற்று என்னைக் கொன்றது போன்ற துன்பத்தைத் தந்த இல்லாமை, இன்றும் கூட வருமோ?"

பாரி மேலகர் உரை

"பரிமேலழகர் உரை: நெருதலும் கொன்றது போலும் நிரப்பு - நெருநற்றும் கொன்றது போன்று எனக்கு இன்னாதவற்றைச் செய்த நல்குரவு; இன்றும் வருவது கொல்லோ - இன்றும் என்பால் வரக்கடவதோ, வந்தால் இனி யாது செய்வேன்? (அவ்வின்னாதனவாவன, மேற்சொல்லிய (குறள்.1045)துன்பங்கள், நெருநல் மிக வருந்தித் தன் வயிறு நிறைத்தான் ஒருவன் கூற்று.). "

மணி குடவர் உரை

"மணக்குடவர் உரை: இன்றும் வரும்போலும்; நெருநற்றும் என்னைக் கொன்றது போலுற்ற நிரப்பிடும்பை. இது நாடோறும் அச்ச முறுத்து மென்று கூறிற்று. "

Indrum Varuvadhu Kollo Nerunalum
Kondradhu Polum Nirappu

Couplet

And will it come today as yesterday,The grief of want that eats my soul away

Translation

The killing Want of yesterday Will it pester me even to-day?

Explanation

Is the poverty that almost killed me yesterday, to meet me today too ?

114

Write Your Comment